ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை தவறு என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்தே, ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரியும் நேற்றிரசு திடீரென ரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

மூடிய அறைக்குள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிக்க தான் விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தாகவும் எனினும் ரணில் விக்கிரமசிங்க இதற்கு உடன்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழடை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் அமைய உள்ள அரசாங்கம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

மேலும் சில நிபந்தனைகளுடனே பிரதமர் பதவியில் ரணிலை நியமிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயர் கரு ஜயசூரியவையும் ரகசியமாக மூடிய அறைக்குள் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். 

இதன்போது பிரதமர் பதவியை தான் ஏற்குமாறு கரு ஜயசூரியவிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கே பிரதமர் பதவியை வழங்க வேண்டும் ஜனாதிபதியிடம் சபாநாயகர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமைய பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.