நேபாளத்தில் பஸ்ஸொன்றும் ஜீப்பொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தின் கீதா நகரிலிருந்து ஷம்ஷெர்குஞ்ச் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸொன்றே இவ்வாறு ஜீப்புடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஜீப் வண்டியில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

விபத்து தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.