மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடனான சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் இன்று மாலை 3.00 மணியளவில் ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பாராளுமன்ற  உறுப்பினர்களுடன் ரணில் விக்ரமசிங்க போச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் மஹிந்த தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது உயர் நீதிமன்றில் இன்று காலை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளனர்.

அத்துடன் இம் மனு மீதான நீதிமன்றின் தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி தலைமையில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூடிக் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளனர்.