(ஆர்.விதுஷா)

உயர் நீதிமன்றத்தினால் கிடைக்கப்பெற்ற தீர்வினை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையில் ஜனாதிபதி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக்க , மஹிந்த - மைத்திரியின் சூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தீர்வினை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையிலான ஜனாதிபதி அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும். எவ்வாறிருப்பினும்  இத்தகைய ஜனாதிபதியில் அரசியல் அமைப்பு மீறலான செயலுக்கு சிறந்த தீர்வை மக்கள் பெற்றுக்கொடுப்பர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.