(இரோஷா வேலு) 

சுயாதீனமாக செயற்பட்ட உயர் நீதிமன்றம் ஜனநாயகத்தையும் மக்கள் ஆணையையும் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. 

50 நாட்களாக தொடர்ந்த ஆராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பான இன்றைய தீர்ப்புக்கு ஆஜராகியிருந்த போதே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.