(ஆர். விதுஷா)

சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டு பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே நல்லாட்சி அரசாங்கத்தினை தோற்றுவித்தோம்.கடந்த காலத்தில் இடம் பெற்ற சில நிகழ்வுகள் பல மாற்றத்தை ஏற்படுத்தின எனத் தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் இந்தத்தீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதியால் பாராளுமன்ற கலைப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு தவறானது என இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில்  தீர்ப்பு  வழங்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.