(நா.தனுஜா)

பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதனூடாக ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தைக் கலைத்து கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்றக் கலைப்பு சட்டத்திற்கு முரணானது என இன்றைய தினம் நளின் பெரேரா தலைமையிலான ஏழு பேர் அடங்கிய நீதியரசர் குழாம் தீர்ப்பளித்தது. தெனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.