லேக்கவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் முறுகல் நிலையொன்று ஏற்பட்ட போதிலும் அது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் குழுவொன்று லேக்கவுஸ் வாயிலில் இருந்த பதாகையை கழற்ற முற்பட்டு உள்நுழைய முற்பட்டபேதுஅங்கு பதற்ற நிலையேற்பட்டது.

இதையடுத்து லேக்கவுஸ் ஊழியர்கள் ஒன்றிணைந்து அவர்களை விரட்டமுற்பட்டபோது அங்கு கைகலப்பு ஏற்பட்டதையடுத்து பதற்றம் மேலும் வலுப்பெற்றது.

இந்நிலையில் கலகமடக்கும் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு முறுகல் நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதன்பின்னர் அங்கு கூடியிருந்தோர்  சிறிது நேரத்தின் பின் அங்கிருந்து கலைந்துசென்றுவிட்டனர்.

அப்பகுதியில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, லேக்கவுஸ் நிறுவனத்தின் சகல தொழிற்சங்கங்களும் தமக்குள் எவ்வித முரண்பாடுகளும் இன்றி வெளியார் உள்நுழைவதை எதிர்த்துள்ளதாக அந்நிறுவன தகலல்கள் தெரிவிக்கின்றன.