பேரிடர் இழப்பிற்கு பிந்தைய ஆரோக்கிய சீர்கேடு குறித்த விழிப்புணர்வு

Published By: Digital Desk 4

13 Dec, 2018 | 06:55 PM
image

உலகம் முழுவதும் புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக 90,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும், 160 மில்லியன் மக்கள் பேரிடர் காலத்திற்கு பிந்தைய ஆரோக்கிய சீர்கேட்டிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றும் ஆய்வு ஒன்று  தெரிவித்திருக்கிறது. 

அத்துடன் பேரிடர் காலத்திற்கு பின் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு குறித்த விழிப்புணர்வு வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட கஜ புயலின் காரணமாக, புயலுக்கு பின்னர் அப்பகுதிகளில் சுற்றுப்புறத்தை சீரழிந்து விடுவதால் ஏராளமான வைரஸ் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகிவிடுகின்றன. நீரும் அசுத்தமடைவதால் நீரின் வழியாகவும் கிருமிகள் பரவுகின்றன.

காலரா, டைபாய்ட், மஞ்சள்காமாலை, டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் தாக்குதல் ஏற்படுகின்றன. இதனை உரிய காலத்தில் கண்டறிந்து தடுக்கவேண்டும். பாதிப்படைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து காப்பாற்றப்படவேண்டும்.

இத்தகைய காலகட்டங்களில் மருந்துகளும், மாத்திரைகளும் சிகிச்சைகளையும் விட மக்களை உளவியல் ரீதியாக மேம்படுத்துவதே சவாலான பணியாகும். இதனை மருத்துவ ஊழியர்கள் திறம்பட மேற்கொண்டு களப்பணியாற்றவேண்டும்.

மக்களும் இயற்கை பேரிடர் காலங்களில் தங்களுக்கு ஏற்பட்ட ஆரோக்கிய சீர்கேடு குறித்து முறையான விவரங்களை வைத்தியர்களிடம் தெரிவித்து, சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு குணமடையவேண்டும்.

டொக்டர் பாக்யராஜ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49