ஐந்து மாநிலங்களின் தேர்தல்கள் மூலம்   காங்கிரஸ் படிக்கவேண்டிய பாடம்

Published By: Digital Desk 4

13 Dec, 2018 | 06:09 PM
image

 சஞ்சய் குமார்

இந்தியாவின் அரசியல் வரைபடம் 2014 ஆம் ஆண்டில் பெரும்பாலும் காவி நிறமாக மாறியது. அண்மைய சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சதிஸ்கார் மாநிலத்தில் உறுதியான வெற்றியைப் பெற்றதுடன் இராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் அறுதிப்பெரும்பான்மைக்கு சற்று குறைவான ஆசனங்களைக் கைப்பற்றியதையும் அடுத்து அந்த காவிநிறம் குறையத்தொடங்கியிருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் இந்த தேர்தல்களில் பெற்ற வாக்குப் பங்கை உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தால்  அது  இந்த   'சண்டையில் 'வெற்றி பெற்றிருக்கின்ற போதிலும், 2019 ' போரில் ' வெற்றி பெறுவது சுலபம் என்று மெத்தனமாக இருக்கமுடியாது.எல்லாவற்றுக்கும் மேலாக இந்தச் சுற்று சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் வடகிழக்கில் அதன் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டுவந்த மிசோரத்தில் தோல்வி கண்டுவிட்டது.அத்துடன் அதன் பழைய அரசியல் எதிரியான தெலுங்கு தேசம் கட்சியுனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தெலுங்கானா ஜன சமித்தியுடனும் சேர்ந்து பலமான கூட்டணியொன்றை அமைத்துக்கொண்டு களமிறங்கியபோதிலும் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் படுமோசமான பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது.

முன்னைய சட்டசபை தேர்தல்களில் பெற்றதைவிடவும் இத்தடவை காங்கிரஸின் வாக்குப் பங்கில் காணக்கூடியதாக இருக்கின்ற அதிகரிப்பு  இந்த மாநிலங்களில் மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்பினார்கள் என்பதை வெளிக்காட்டியிருக்கும் அதேவேளை,ஏனைய மாநிலங்களில் அதே மனநிலை மக்கள் மத்தியில் நிலவுகிறது என்று அர்த்தமாகிவிடாது. இந்த வெற்றிகளைக் கொண்டாடுவதைக் காட்டிலும் அவற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்று  காங்கிரஸ் தன்னைத் தானே தொடர்ந்து உள்ளாய்வுக்கு உட்படுத்தவேண்டியதே அவசியமாகும்.

பாரதிய ஜனதாவைப்  பொறுத்தவரை, இந்த தோல்விகள் கட்சியல் உள்ன சிலருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும், ஆனால் 2019 பொதுத் தேர்தலில் பெரிய போட்டிக்கான வலிமையுடன் அது தொடர்ந்தும் விளங்குகிறது. பாரதிய ஜனதாவின் வாக்குப் பங்கு சுமார் 8 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கும் ( 2013 இல் 41 சதவீதத்தில் இருந்து 2018 இல் 33 சதவீதத்துக்கு) சதிஸ்கார் மாநிலத்தைத் தவிர, ஏனைய இரு மாநிலங்களிலும் அக் கட்சி மக்களின் வாக்குகளைப் பொறுத்தவரை காங்கிரஸை விடவும் பெருமளவுக்கு பின்னடைவைக்கண்டிருக்கவில்லை. 

பாரதிய ஜனதா அதிகாரத்தை இழந்தாலும்  இரு மாநிலங்களில் கடும் போட்டிக்கான பலத்துடனேயே இருக்கிறது.மத்திய பிரதேசத்தில்  ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய வழமையான எதிர்ப்புணர்வை சிவ்ராஜ் சௌகான் அரசாங்கம்  சமாளிக்கக்கூடிதாக இருந்தது.அத்துடன் இராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அரசாங்கத்துக்கு எதிராக கோபம் இருந்தாலும் இழப்புக்களை சாத்தியமானவுக்கு குறைந்தபட்சமாவையாகவும் பாரதிய ஜனதாவால் இயலுமாக இருந்தது.இந்த நிலைகமகள் போட்டியிடுவதில் கட்சிக்கு இருக்கும் ஆற்றலை வெளிக்காட்டுகின்றன.

இராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 2013 இல் 21 ஆசனங்களை வென்றது; இத்தடவை அது 99 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.காங்கிரஸ் இத்தடவை வெற்றிபெறும் எனறு எதிர்பார்க்கப்பட்ட அதேவேளை, அது அறுதிப் பெரும்பான்மையைப் பெறத்தவறிவிட்டது.கூடுதல் ஆசனங்களைப் பெற்ற தனிக்கட்சியாக அது வந்திருக்கிறது.

மக்கள் ஆதரவின் அடிப்படையில் நோக்குகையில் இரு தேசியக் கட்சிகளுக்கும் இடையில் பெரியளவில் வேறுபாடு இல்லை ; பாரதிய ஜனதா 38.8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.காங்கிரஸுக்கு 39.3 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன.3013 இல் 33.1சதவீதமாக இருந்த அதன் வாக்குப் பங்கு 2018 இல் 39.3 சதவீதமாக அதிகரித்திருப்பது குறித்து காங்கிரஸ் வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாம்.

மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதாவை (109) விட காங்கிரஸ் (114) ஐந்து ஆசனங்களைக் கூடுதலாக பெற்றிருக்கின்ற போதிலும் வாக்குப்பங்கைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா 0.1 சதவீதம் கூடுதலாகவே இருக்கிறது.மீண்டும் வாக்குப்பங்கை நோக்குவோமானால்  2013 இல் 36.4 சதவீதத்தைப் பெற்ற காங்கிரஸ் 2018 இல் 41.1சதவீதத்தைப் பெற்றிருக்கிறது.காங்கிரஸினதும் பாரதிய ஜனதாவினதும் வாக்குப்பங்குகளை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது மத்தியப் பிரதேசத்திலும் இராஜஸ்தானிலும் எந்தக் கட்சிக்கும் சார்பாக அலை என்று எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.

ஆனால் காங்கிரஸ் வென்றெடுத்திருக்கும் கணிசமானளவு ஆதரவு இந்த மாநிலங்களில் மக்கள் மத்தியில் உள்ள உள்ளுணர்வை புரிந்துகொள்ளவைக்கிறது.2013 சட்டசபைத் தேர்தல்களில் இராஜஸ்தானில் 12 சதவீதத்தாலும் மத்தியப் பிரதேசத்தில் 8 சதவீதத்தாலும் காங்கிரஸை விடவும் பாரதிய ஜனதா வாக்குப் பங்கில் மேம்பட்டு நின்றது என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும்.

இந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸுக்கு சார்பான அசைவை பல்வேறு காரணிகள் சாத்தியமாக்கியிருக்கின்றன.இராஜஸ்தானில் மக்களின் மனநிலை வேறு எதையும்விட முதலமைச்ருக்கு எதிரானதாகவே கூடுதலானதாக இருந்த அதேவேளை மத்தியப் பிரதேசத்தில் மனநிலை மாநில அசாங்கத்துக்கு எதிரானதாகவும் மத்திய அரசாங்கத்துக்கு எதிரானதாகவும(பெரிதாக வெளிப்படையாக தெரியாவிட்டாலும்) இருந்தது.சதிஸ்காரில் காங்கிரஸின் ஆதரவு அதிகரிப்பு இறுதிக்கட்டத்திலேயே நடந்தேறியிருக்கிறது

.நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதாகவும் விவசாயக்கடன்களை ரத்துச்செய்வதாகவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காங்கிரஸுக்குப் பயனைத் தந்தன.விவசாயிகள் மத்தியிலான அதிருப்தி இந்த மூன்று மாநிலங்களில் மாத்திரம் தான் இருக்கிறது என்று இல்லை.மற்றைய மாநிலங்களிலும் அந்த அதிருப்தி  அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.சதிஸ்கரில் இதை சரியாக அடையாளம் கண்டு காங்கிரஸ் கட்சி பயனடைந்திருக்கிறது.

இந்த மனநிலை வடகிழக்கு இந்தியாவுக்கு பரவவில்லை என்பதை மிசோரம் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.காங்கிரஸ் அந்த மாநிலத்தில் கடுமையான தோல்வியைக் கண்டிருக்கிறது. முன்னைய சட்டசபைத் தேர்தலில் 34 ஆசனங்களை வென்ற அக்கட்சி இத்தடவை ஐந்து ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியது. மேற்கூறப்பட்ட மனநிலை தென்னிந்திய மாநிலங்களுக்கும் பரவவில்லை என்பது கவனிக்கத்தக்கது.தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமித்தி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் 47 சதவீதமான வாக்குகளைப் பெற்ற அக்கட்சி மொத்தமுள்ள 119 ஆசனங்களில் 88 ஆசனங்களைக் கெப்பற்றியிருக்கிறது.

இந்த முடிவுகள் எல்லாம் 2019 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கு கூடுதல் பலம்பொருந்தியதாக காங்கிரஸைக் கட்டியெழுப்புவதற்கு நிச்சயமாக வழிவகுக்கும்.ஆனால், அத்தேர்தலில் சிறப்பாக செயற்படுவதற்கு தற்போது கடைப்பிடிக்கின்ற போக்கை உறுதியாக அக்கட்சி தொடரவேண்டும்.

 (சஞ்சய் குமார் அபிவிருத்தியடையும் சமூகங்களின் ஆயவுக்கான நிலையத்தின் பேராசிரியரும் பணிப்பாளருமாவார். நன்றி ; இந்து ( ஆங்கிலம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13