உயர் நீதிமன்றின் இத் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் ஜனநாயகம் உறுதியானது எனவும் அரசியலமைப்பு பலமானது எனவும், இந்த வெற்றியை நாங்கள் அமைதியாக கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு இனிமேலும் செயற்படாது, நாட்டை பற்றி நினையுங்கள் எனவும் வலியுறுத்தினார்.