ஜனாதிபதி நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வெளியிட்டு அதனை ஏற்றுக்கொள்வார் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்

சட்டம் நீதி உள்ளிட்ட மூன்று துறைகளும் ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை அவசியமாகும். ஆனால் விஷேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பாராளுமன்றத்தை கலைத்தமை ஊடாக மக்கள் ஆணை மீறப்பட்டிருந்தது. 

அதனை பாதுகாப்பதற்கு முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். இதிலிருந்து நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தை அமைக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளோம். எனவே அரசாங்கத்தை அமைத்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்கொண்டுத்து செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்தார்.