மனித மாமிசம் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது என்று கூறியவாறு, தனது தோள் பையில், ஒரு பெண்ணின் கை மற்றும் காலுடன் பொலிசாரிடம் சரணடைந்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜேன்லே என்ற 24 வயது பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றத்திற்காக நேற்று நினோ என்ற 33வயதுடைய ஒருவரும், லுங்கிசனி என்ற 32 வயதுடைய ஒருவரும் தென்னாப்பிரிக்காவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

லுங்குசனி ஒரு பொலிஸ் நிலையத்திற்கு தோளில் மாட்டிய ஒரு பையுடன் சென்றுள்ளான்.

மனித மாமிசம் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது என்று கூறிய லுங்குசனி, தன்னை கைது செய்யுமாறு கூற, பொலிசார் அவனை முதலில் நம்பவில்லை.

பின்னர் அவனிடமிருந்த பையை சோதனையிட்டபோது, அதில் ஒரு கையும் ஒரு காலும் இருந்தன. அதிர்ச்சியடைந்த பொலிசார் அவனைக் கைது செய்த போது, அவன் பொலிஸாரை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு மேலும் பல உடல் பாகங்கள் இருப்பதை பொலிசார் கண்டுள்ளனர். மேலும்,

விசாரணையில் தன்னை ஒரு பாரம்பரிய வைத்தியர் என்று கூறிக்கொள்ளும் லுங்குசனி, அதிர்ஷ்டம் வரவேண்டும் என்பதற்காக ஜேன்லே என்னும் பெண்ணை தலையை வெட்டிக் கொன்றதோடு அவளது உள்ளுறுப்புகள், கைகள் மற்றும் பாதத்தை தின்றுள்ளான்.

அத்துடன் நினோ என்பவனையும் ஜேன்லேவின் மாமிசத்தை உண்ணுமாறு அறிவுறுத்தியுள்ளான் அவன். இவர்களுடன் கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட சிவோல் (31) என்னும் நபர் சிறையிலிருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டான். என்பதுவும் தெரியவந்துள்ளது.