ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு இன்றும் சொற்ப நேரத்தில் உயர்நீதிமன்றத்தால் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தைச்சுற்றி பலத்த பொலிஸ்மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.

இதேவேளை நீதிமன்றை நோக்கி இருதரப்பு அரசியல் பிரமுகர்கள் வந்தவண்ணமுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்கள் நீதிமன்றின் வளாகத்திற்கு வெளியில் குவிந்து நிற்பதை அவதானிக்க முடிந்தது.

சர்வதேசத்தின் கவனம் இன்றையதினம் நீதிமற்றை ஈர்த்துள்ளநிலையில் சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களும் நீதிமன்றில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் எவரும் எவ்வித கருத்துக்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவருகின்றது.

இதேவேளை கொழும்பு நகரம் முழுவதும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசநிறுவனங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதகவும் பொதுமக்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கலகம்விளைவிப்போரை தடுத்து வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரைக்கும் கலகம் விளைவித்த 10 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.