(இரோஷா வேலு) 

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியப் பிரஜையொருவர் கதிரையிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

70 வயதுடைய பிளாக் ஸ்டீவ் ரொபட் பட்ரிக் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தனியார் ஹோட்டலொன்றில் அமர்ந்திருந்த வேளையிலேயே குறித்த நபர் கதிரையிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரித்தானிய தூதரகத்தினூடாக குறித்த நபரது குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.