கண்டி ஹீரஸ்ஸகல பகுதியில் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு இறந்ததாக சந்தேகிக்கப்படும் சிறுத்தையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று அடி நீளம் கொண்ட குறித்த சிறுத்தை,  வீடுகளில் வளர்க்கப்பட்டுவரும் பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளை  கொன்றுள்ளதாக பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

பேராதனை மிருக வைத்திய பீட அதிகாரிகள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

இது மலையக காடுகளில் காணப்படக் கூடிய மிக அரிய வகையான சிறுத்தை இனத்தைச் சேர்ந்தது.

இது காட்டுப் பன்றி ஒன்றின் தாக்குதலால் பலியாகி இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.