பிக்பொஸ் புகழ் காதல் ஜோடியாக நடிகர் ஆரவ்வும், நடிகை ஓவியாவும் ராஜ பீமா படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

பிக் பொஸ் புகழ் நடிகர் ஆரவ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘ராஜ பீமா.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆஷிமா என்ற நடிகை நடிக்கிறார். இதனிடையே படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் நடினை ஓவியா. 

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, இந்த படத்தில் ஓவியா ஒரேயொரு குத்துபபாட்டிற்கு மட்டும் ஆடவில்லை. அவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திர்தில் நடிக்கிறார். இதற்கான படபிடிப்பு விரைவில் தொடங்கும்.” என்றனர்.

இது குறித்து ஓவியா தெரிவித்ததாவது,

‘ராஜ பீமா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அது கௌரவ வேடம் என்று சொல்லமுடியாது. விரிவுப்படுத்தப்பட்ட சிறப்பு தோற்றம் கொண்ட கதை என்று சொல்லலாம். அத்துடன் ஆரவ்வுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன்.” என்றார்.