சுற்றுலா விசாவில் இலங்கை வந்து சட்டவிரோதமாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பெண் ஒருவர் இன்று  காலை கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த எஸ். இராஜேஸ்வரி (வயது – 31) என மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் நிறுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.