ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையே இரகசியமாக ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகிய போலி ஆவணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பின் எஸ்.எம்.மரிக்கார் கோரிக்கை விடுத்துள்ளார்.