இந்தியஅணியின் விக்கெட் காப்பாளர் ரிசாப் பந்த் அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் நேரடியாக மோதக்கூடாது என முன்னாள் ஜாம்பவான் சுனி;ல் காவஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்டில் விக்கெட் காப்பாளர் ரிசாப் பந்து  விளையாடிய விதமும் எதிரணி வீரர்களை சீண்டியதும் தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்திய விதமும் பலரின் அபிமானத்தை பெற்றுள்ளது.

விக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரபோன் மூலம் அதனை கேட்க முடிந்துள்ளது.

பொக்ஸ் ஸ்போர்ட்சின் வர்ணணையாளர்கள் நேர்முக வர்ணணையை இடைநிறுத்திவிட்டு சில நிமிடங்கள் பந்த் விக்கெட்டின் பி;ன்னால் நின்று தெரிவிக்கும் விடயங்களை ஒலிபரப்பியுள்ளனர்.

ஐந்தாவது டெஸ்டில் இந்தியா வெற்றியை நோக்கி  நெருங்கிக்கொண்டிருந்தவேளை வெற்றியை தடுக்ககூடிய விதத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸை பந்த் சீண்டியுள்ளார்.

அஸ்வின் பந்து வீசியவேளை கமின்ஸை அந்த பந்துகளை சிக்சர் அடிக்குமாறு பந்து சீண்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் இதனை பாராட்டியிருந்தாலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்

உங்கள் அணியை உற்சாகப்படுத்துவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் எதிரணி வீரரை நேரடியாக குறிப்பிட்டு சவால் விடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்

நீங்கள் உங்கள் அணியினருடன் பேசலாம் ஆனால் எதிரணி வீரர்களை எதுவும் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரை நேரடியாக சீண்டுவதை தவிர்க்கவேண்டும் அடுத்த டெஸ்ட் இடம்பெறும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாகயிருந்தால் பட்கமின்ஸ் நிச்சயம் பதிலடி கொடுப்பார் என கவாஸ்கர் தெரிவி;த்துள்ளார்.