2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான விலைப்பட்டியிலில் இலங்கையின் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க ஆகியோர் அதிக விலைப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். ஏலத்தில் 346 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட போடிக்கான வீரர்களின் ஏலம் எதர்வரும் 18 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

ஏலத்துக்காக 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் தங்களுக்குத் தேவையான வீரர்கள் என்று அணி நிர்வாகங்கள் ஐ.பி.எல்.நிர்வாகத்திடம் பட்டியலை சமர்ப்பித்தன. 

இதனடிப்படையில் 346 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் 70 வீரர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள். 

இதில் அஞ்சலோ மெத்தியூஸ், லசித் மலிங்க, பிரண்டன் மெக்கல்லம், கோரி அண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரன், ஷோன் மார்ஸ், டார்சி ஷோர்ட், கலின் இங்ராம் உள்ளிட்ட 09 வீரர்களின் அடிப்படை விலை இந்திய ரூபா மதிப்பில் 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.