ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை  கடந்த 9 ஆம் திகதி  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என தாக்கல்  செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை  4 வழங்கப்படவுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் தெற்கு அரசியல் பரபரப்பான நிலையில் காணப்படுவதோடு இந்த தீர்ப்பு இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒன்றாக அமையவுள்ளது.