தொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்

Published By: Digital Desk 4

12 Dec, 2018 | 10:15 PM
image

சீனாவில் இயங்கி வரும் செம்சங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தனது கையடக்க தொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது. 

சீனாவில் இயங்கி வரும் தியாஞ்சின் சம்சங் எலக்ட்ரோனிக்ஸ் டெலிகொம்யூனிகேஷன் தயாரிப்பு ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக சம்சங் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவில் வடக்கில் அமைந்திருக்கும் தியாஞ்சின் நகரத்தில் சம்சங் தொலைபேசி  தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டின் இறுதியில் தியாஞ்சின் சம்சங் தயாரிப்பு ஆலை மூடப்படுவதாக  சம்சங் அறிவித்துள்ளது. இந்த ஆலையில் பணியாற்றி வருவோருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய தொகை வழங்கப்படும்.

மேலும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் சம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருவோருக்கு வேறு தயாரிப்பு ஆலைகளில் பணியமர்த்துவோம் என செம்சங் தெரிவித்துள்ளது.

இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சம்சங் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், சீனாவின் ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் தொடர்ந்து இயங்கும் என சம்சங் தெரிவித்துள்ளது.

சம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் ஆண்டு முழுக்க 3.6 கோடி தொலைபேசிகளையும், ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் மொத்தம் 7.2 கோடி தொலைபேசிகளையும்உற்பத்தி செய்கிறது. இத்துடன் வியட்நாமில் உள்ள இரண்டு தயாரிப்பு ஆலைகளில் ஆண்டு முழுவதும் 24 கோடி தொலைபேசிகள் உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26