சப்புகஸ்கந்த பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி பிரயோகம் சப்புகஸ்கந்த கல்வெல வீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 35 வயதான வர்த்தகர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.