இலங்கை தேசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 தேசிய வர்த்தக நடவடிக்கைகளுக்கான விருது விழாவில் அரச உற்பத்தி துறைக்காக வழங்கப்படும் தங்க விருதினை இம்முறையும் அரச மரக்கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அந்த விருதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

மூன்றாவது முறையாகவும் அரச மரக்கூட்டுத்தாபனம் இவ்விருதை பெற்றுள்ளதுடன், கூட்டுத்தாபனத்தின் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாந்த பண்டாரவினால் இவ்விருது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், பதில் பணிப்பாளர் எம்.வை.டி.பவர குமார உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.