சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார

Published By: Vishnu

12 Dec, 2018 | 08:02 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணம் எனக் கூறிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக ரணிலை மீண்டும் பிரதமாராக நியமித்து எஞ்சியுள்ள ஒரு வருடத்தில் எந்த மாற்றமும் இடம்பெறப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

பிரதமர் ஆசனத்தில் மஹிந்தவை அமர்த்தவோ அல்லது ரணிலை அமர்த்த வேண்டும் என்பதோ எமது பிரச்சினை அல்ல. அரசியல் அமைப்பினை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கம் அதற்காகவே நாம் போராடினோம். 

பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தமை, பாராளுமன்றத்தை கலைத்தமை , அமைச்சு பதவிகளை வழங்குதல் , நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதும் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்க முயற்சித்தல் , அமைச்சர்களை நியமித்தல் என்பன அந்த சூழ்ச்சியை வெற்றிப் பெறச் செய்வதற்கான முயற்சியே. எவ்வாறாயினும் சூழ்ச்சியை தோற்கடிக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எமது பங்களிப்பை வழங்கியுள்ளோம். 

நாங்கள் அரசியல் இயக்கம் என்ற வகையில் ஏதேனும் நிலைப்பாட்டை மேற்கொள்வோம். ஜனநாயகத்திற்காக நாங்கள் அந்த நிலைப்பாட்டை எடுப்போம். நாங்கள் அதிலிருந்து மாறப் போவதில்லை. அடுத்த அரசாங்கம் அமையுமாக இருந்தால் அதில் பிரதமர் யார் என்பது எமக்கு தேவையில்லை. 

யார் அந்த ஆசனத்தில் அமர்ந்தாலும் மாற்ற முடியாது. ஆசனத்தில் அமர்ந்த நேரம் முதல் எவ்வாறு பணத்தை தேடுவது என்பதுதான் அவர்களின் எண்ணங்களாக இருக்கும். அரசியல் கலாச்சாரம் மற்றும் பொருளாதார முறைமையில் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. இதனால் எந்த முறையில் பார்த்தாலும் அந்த ஆசனத்தில் அமர்ந்தாலும் அது எங்களுக்கு தேவைப்படாதது. 

நாங்கள் அரசியல் நிலைப்பாடொன்றில் இருக்கின்றோம். சூழ்ச்சியை தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றோம். இதற்கு மேல் எமக்கு பிரதமர் ஆசனத்தில் யார் அமர்ந்தாலும் தேவையில்லை. ரணில் அமர்ந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. இதனால் இன்றைய தினம் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை எமக்கு தேவைப்படாதது. என்பதனை கூறிக்கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15