பாப்­ப­ரசர் பிரான்சிஸ் குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு உதவத் தவ­று­ப­வர்கள் தொடர்பில் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தை­யொட்டி ஆற்­றிய தனது பாரம்­ப­ரிய உரை­யி­லேயே அவர் இவ்­வாறு கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

குடி­யேற்­ற­வா­சிகள் அவர்­க­ளுக்கு வர­வேற்பும் உத­வியும் அளிக்­கப்­பட வேண்­டி­ய­வர்­களால் எப்­போதும் நிரா­க­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

அத்­துடன் தீவி­ர­வா­தத்தை குருட்­டுத்­த­ன­மான மூர்க்­க­மான வன்­மு­றை­யொன்­றாகக் குறிப்­பிட்ட பாப்­ப­ரசர், அதற்கு எதி­ராக அன்பு எனும் ஆயு­தத்தின் துணை­யுடன் போராட வேண்டும் என அழைப்­பு­வி­டுத்தார்.

"உயிர்த்­தெ­ழுந்த இயேசுக் கிறிஸ்­துவின் செய்தி போர், பட்­டினி, வறுமை மற்றும் சமூக அநீதி என்­ப­வற்றால் பாதிக்­கப்­பட்டு சிறப்­பான எதிர்­கா­லத்தைத் தேடிப் புறப்­பட்ட ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் நிரா­க­ரிக்கக் கூடாது என எமக்கு அழைப்பு விடுக்­கி­றது" என பாப்­ப­ரசர் தெரி­வித்தார்.

இதன் போது மோதல்கள் இடம்­பெறும் சிரியா தொடர்­பிலும் பாப்­ப­ரசர் பிரார்த்­தித்தார்.

சிரியா தொடர்பில் எதிர்­வரும் மாதம் மீள ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள சமா­தான பேச்­சு­வார்த்­தைகள் வெற்றி பெறும் என நம்­பு­வ­தாக அவர் கூறினார்.

அத்­துடன் அவர் அண்­மையில் பெல்­ஜி­யத்தின் பிரஸல்ஸ் நகர், துருக்கி, நைஜீ­ரியா, சாட், கமெரோன், ஐவரி கோஸ்ட் மற்றும் ஈராக்கில் இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் குறித்தும் குறிப்­பிட்டார்.

மேற்­படி பாப்­ப­ர­சரின் பாரம்­ப­ரிய உரையை செவிமடுக்கும் நிகழ்வில் பெல் ஜியத்தின் முன்னாள் மன்னர் இரண்டாம் அல்பேர்ட்டும் முன்னாள் மகாராணியார் போலாவும் கலந்துகொண்டமை குறிப்பி டத்தக்கது.