தோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு அழுத்தம்கொடுத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமும் எவ்வித எதிர்பார்ப்புகளும் நிறைவேறாத நிலையில் ஜனாதிபதியின் கோரிக்கையினையடுத்து நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் நமது தாய் தந்தை, சகோதரா்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கையை முன்வைத்து, தனியொரு இளைஞராக பாராளுமன்ற வளாகத்தில் மலையக இளைஞரான கணேசன் உதயகுமார் போராட்டத்தில் குதித்துள்ளார்.