(இரோஷா வேலு) 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமாகவே இன்றைய பாராளுமன்றம் இயங்குகின்றது. அது வெறும் சிறிகொத்தாவே. இங்கு மேற்கொள்ளும் தீர்மானங்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய நாளில் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கப்பெற வாய்ப்பில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன. பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை பதவிகளை வகிப்பதற்காக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் மகிந்த தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைகளையும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்போம். ஆயினும் பாராளுமன்றம் செல்ல நாம் தயாரில்லை. தொடர்ந்து நாம் பாராளுமன்றை நிராகரிப்போம்.