கிழக்கில் மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதனால் சுகாதார திணைக்கள அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உத்தியோத்தர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் டெஙகு நோய் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவும் உள்ளது.