பாகிஸ்­தானின் லாகூர் நகரில் சன­சந்­தடி மிக்க பூங்­கா­வொன்றில் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­த­லுக்கு அந்­நாட்டு தலிபான் தீவி­ர­வாத குழுவின் பிரி­வான ஜமாத் உல் – அஹ்ரார் உரிமை கோரி­யுள்­ளது.

மேற்­படி தாக்­கு­தலில் பெருந்­தொ­கை­யான சிறு­வர்கள் உட்­பட குறைந்­தது 72 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 300 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அந்தப் பூங்­காவில் உயிர்த்த ஞாயிறு தினத் தைக் கொண்­டா­டிய கிறிஸ்­த­வர்­களை இலக்கு வைத்தே இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக ஜமாத் உல் – அஹ்ரார் தெரி­விக்­கி­றது.

அதே­ச­மயம் பாகிஸ்­தா­னிய பொலிஸார் இந்தத் தாக்­குதல் சம்பவம் தொடர்பில் தெரிவிக்­ கையில், அது தொடர் பில் தாம் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்­ கொண்டு வரு­வதாக கூறு­கின்­றனர்.

குண்டு வெடிப்­பை­ய­டுத்து சின்­னா­பின்­ன­மாக சிதறிக் கிடந்த சட­லங்­க­ளுக்­கி­டையே தமது பிள்­ளை­களை பெற்றோர் பரி­த­விப்­புடன் தேடிய காட்சி நெஞ்சை உருக்­கு­வ­தாக இருந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்தத் தாக்­கு­த­லுக்கு பாகிஸ்­தா­னிய ஜனா­தி­பதி கடும் கண்­டனம் தெரி­வித்­துள்ளார். இந்­நி­லையில் பிராந்­திய அர­சாங்கம் 3 நாள் துக்க தினத்தைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேற்­படி தாக்­குதல் குறித்து ஜமாத் உல் – அஹ்­ராரின் பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான எஹ்­ஸ­குல்லாஹ் எஹ்­ஸன் விப­ரிக்­கையில், “இந்தத் தாக்­குதல் மூலம் நாம் லாகூர் நக­ருக்குள் பிர­வே­சித்து விட்டோம் என்ற செய்­தியை பாகிஸ்­தா­னிய பிர­தமர் நவாஸ் ஷெரீப்­பிற்கு அனுப்பி வைத்­துள்ளோம்" என்று கூறினார்.

அத்­துடன் அந்­நாட்டில் மேலும் தாக்­கு­தல்­களை நடத்தப் போவ­தாக அவர் அச்­சு­றுத்தல் விடுத்தார்.

மேற்­படி தாக்குதலில் உயிரிழந்த அப் பாவி மக்கள் தொடர்பில் அனுதாபத்தை வெளியிட்டுள்ள நவாஸ் ஷெரீப், பிரித் தானியாவுக்கு மேற்கொள்ளவிருந்த தனது சுற்றுப் பயணத்தை பிற்போட்டுள்ளார்.