பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும் வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் இறுப் போட்டித் தொடர் இன்று சீனாவில் ஆரம்பமாகிள்ளது. 

இத் தொடரானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

இதில் கலந்து கொள்ளும் வீர, வீராங்கனைகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். தொடரின் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடங்களை பிடிக்கும் வீர, வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்கள் 

இந் நிலையில் இன்று இடம்பெற்ற குழு 'ஏ' யின் முதல் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டில் 2 ஆவது இடம் பிடித்தவரும், உலக தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, நடப்பு சம்பியனான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நடப்பு சம்பியனான அகோனே யமாகுச்சியை எதிர்கொண்டார். 

இப் போட்டியில் சிந்து 24:22, 21:15, என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை யாமாகுச்சை  வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதேவேளை குழு 'பி'யில் இடம்பெற்ற மற்றொர் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் சமீர் வர்மா ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டோவை எதிர்கொண்டார்.

இப்‍ போட்டியில் சமீர் வர்மான 18:21, 6:21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.