சீனத் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் 10 பில்லியன் கனேடிய டொலர் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவினால் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறி, ஈரானுக்கு இலத்திரனியல் உபகரணங்களை அனுப்ப முயற்சித்த குற்றச்சாட்டின் கீழே சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் நிறுவன அதிபரின் மகளும் அந் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த முதலாம் திகதி கனடாவில் வான்கூர் நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 

இந் நிலையில் வான்கூர் நீதிமன்றில் கடந்த மூன்ற நாட்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் இவர் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் 24 மணித்தியாலயங்கள் முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளதுடன் மின்னணு கணுக்கால் பட்டியை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.