2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை இன்றுடன் நிறைவடையுள்ளது. 

கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான இப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றினர். இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் பரீட்சைகள் இடம்பெற்றது.

இந் நிலையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையானது இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது. பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் அமைதியாக கலைந்து செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பரீட்சை நிறைவடைந்த பின்னர் பரீட்சை நிலையங்கள், வாளகத்தில் மோதலை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவாருக்கு எதிராக கடும் தண்டனை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சை நிலைய வளாகங்களிலும் பொலிஸ் ரோந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.