(நா.தனுஜா)

பாராளுமன்றமானது நிலையியற் கட்டளைகள், பாராளுமன்ற சம்பிரதாயங்கள் என்பவற்றுக்கு அமையக் கூட்டப்படுமாயின் நாமும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, தற்போது சபாநாயகர் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும், பாராளுமன்ற அமர்வுகள் முறைப்படி இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் இலங்கை வரலாற்றில் பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் தமது கடமைகளை முன்னெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். இந்நிலையில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.