(ஆர்.விதுஷா)

அளுத்கம பகுதியில் நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று  முற்பகல் 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் அளுத்கம மொரகல்ல பகுதியில் அமைந்துள்ள கடற்பரப்பில் நீராட சென்ற போதே மேற்படி பெண் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். 

அதனை அடுத்து உடனடியாக மீட்கப்பட்ட வெளிநாட்டு பெண் களுத்துர - நாகொடை வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அளுத்கம பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக  நாகொடை வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு;ள்ளதாகவும் பொலிசார் தெரிவத்தனர். 

மேலும், உயிரிழந்தவர் 71 வயதுடைய ரஷ்ய நாட்டவரான சோயா கிரயின் எனப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.