முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் இம்மாதம் 19 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலைச் சதி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரையும் கொலை சதி தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜையையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.