(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசியல் தலைவர்கள் அடம்பிடிக்காமல் விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம். அதற்காக சர்வமத தலைவர்களின் தலைமையில் பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் இதுதொடர்பாக கலந்துரையாடி தீர்மானத்துக்கு வரவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 

கட்சி அடிப்படையில் சாதாரண மக்கள் முரண்டுபட்டுக்கொண்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தற்போது அரசியல் நெருக்கடியை கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ள முற்படவேண்டும். அதற்கு அரசில் தலைவர்கள் தங்கள் பிடிவாதங்களை கைவிட்டு நாட்டின் எதிர்காலத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டும். அதற்காக மதத்தலைவர்கள் முன்வந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.