ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச்செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து விபரங்களை வெளிப்படுத்தாமை மற்றும் அரச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.