பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கையே எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று புதன்கிழமை (11-12-2018) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசாரணை எடுப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.