நபர் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து இவ் விடயம் தொடர்பில் மஹர நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இந் நிலையிலேயே அவர் நேற்றிரவு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையிலேயே பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.