இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானீன் இளைய தங்கையான இஸ்ரத் காதீரி ‘யோகி டா ’என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியள்ளார்.

 கபாலி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. இவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கும் படம் ‘யோகி டா’. இதனை அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்குகிறார். எக்சன் திரில்லர் பிரிவில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் இஸ்ரத் காதீரி என்ற பெண், இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். 

இவர் ஒஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் இளைய தங்கை. இவர் ஏற்கனவே பின்னணி பாடகியாக பாடல்களை பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஏற்கனவே ஏ ஆர் ரஹ்மானின் மூத்த சகோதரி ஏ ஆ ரஹானா இசையமைப்பாளராக இருக்கிறார். 

இதனிடையே ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஹெச் காசீப் கூட ஏ ஆர் ரஹ்மானின் உறவினர் என்பதும், ஏ ஆர் ரஹ்மானின் இரண்டு வாரிசுகளும் பின்னணி பாடகியாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நடிகை சாய் தன்ஷிகா நடிக்கும் ‘யோகி டா’ படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் எளிமையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.