பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றை மாற்றக்கூடிய உருவாக்கும் தீர்ப்பாக  அமையும் என இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையிலேயே உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன் என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் தீர்ப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர்கள் பல தலைமுறைக்கு இந்த தீர்ப்பு குறித்து கற்பார்கள் என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.