(நா. தினுஷா)

அரச நிதியினை கட்டுப்படுத்தவோ, செலவிடவோ  எவ்வித அதிகாரங்களும் அரசியலமைப்பின்  பிரகாரம்  ஜனாதிபதிக்கு   வழங்கப்படவில்லை. நிதி தொடர்பிலான அதிகாரங்கள்  பாராளுமன்றத்திற்கே முழுமையாக காணப்படுகின்றது  என  பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி  சில்வா தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அரசியல்  விடயங்கள் தொடர்பில்  தவறான   தீர்மானங்களையே தொடர்ந்து எடுக்கின்றார். இவர் பிறரது ஆலோசனைகளுக்கு இணங்கவே செயற்படுவதனால்  ஆலோசனை  வழங்குபவர்கள்  அரசியலமைப்பு  மற்றும்  பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் உண்மையான விடயங்களை அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.