(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 500 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு முயற்சித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலைபடுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ஜனாதிபதி மைத்திரிபால சிறு பருவத்தில் தனது தந்தை மீதுள்ள கோபத்தில் வயல் வெளிக்கு தீ மூட்டியதைப் போன்று, தற்போது ரணில் விக்ரமசிங்க மீதுள்ள கோபத்தில் அவர் எடுத்துள்ள தீர்மானங்களினால் நாடு மிக மோசமான நிலையினை நோக்கி வீழ்ச்சியடைந்துள்ளது. 

அத்துடன் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்தராஜபக்ஷவினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் கனவை கலைத்தமையினாலேயே எமக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

எனினும் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் அஞ்சவோ அல்லது பின்வாங்கப்போவதுமில்லை என்றார்.