"யானை- புலி ஒப்பந்தம் நாளைமறுதினம் பாராளுமன்றில் வெளிப்படும்"

Published By: Vishnu

10 Dec, 2018 | 05:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

யானை - புலிகள்  கூட்டணி அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக செய்துக் கொண்ட நாட்டுக்கு  எதிரான ஒப்பந்தங்கள்  நாளைமறுதினம் பாராளுமன்றத்தில்  வெளிப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

மேலும் பிரபாகரன் ஆயுதத்தால் செய்ய முடியாத  பல விடயங்களை இன்று   பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன்  ஐக்கிய தேசிய  கட்சியின் பங்காளியாக இருந்து  சாதித்து விட்டார். மிகுதியாக இருந்த  விடயங்களை தற்போதைய  நெருக்கடியில்  நிறைவேற்றிக் கொள்ள தீர்மானித்துள்ளனர். தமது  ஆட்சியினை தக்கவைத்துக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சியினர்  நாட்டுக்கு  எதிரான செயற்பாடுகளையும  செய்ய துணிவார்கள்.

தற்போதும் சுமந்திரனின் பல கொள்கைகளுக்கு ஐக்கிய தேசிய  கட்சி  இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதரவினை நாளை  பாராளுமன்றத்தில் காணலாம்.  

அத்துடன் பிரதமர்  பதவியை யாருக்கும் விட்டுக் கொடுக்க ரணில் விக்ரமசிங்கவிற்கு விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார். 

பொதுஜன  பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதன‍ை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13