(நா.தனுஜா)

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் குழப்ப நிலையானது காணி விடுவிப்பு விவகாரத்தில் எவ்வித பாதிப்பையோ, பின்னடைவ‍ையோ ஏற்படுத்தாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

ஏற்கனவே அறிவித்தமைக்கு இணங்க இவ் வருட இறுதிக்குள் வடக்குக் கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்.

மேலும் வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள அனைத்துக் காணிகளையும் உடனடியாக விடுவிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். காணிகளின் உண்மையான உரிமையாளர்களை இனங்கண்டுகொள்ள வேண்டும் என்பதுடன், உறுதிப்படுத்தாமல் அனைத்துக் காணிகளையும் விடுவிப்பதில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. 

எனவே படையினர் வசமுள்ள காணிகளில் காணி உறுதிப்பத்திரம் உள்ள காணி உரிமையாளர்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்படும்.