ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, மனநலக் கோளாறு மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை ஆரம்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் மென்டாமுஸ் பேராணை ஒன்றின் ஊடாக உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே பெண்ணொருவர் குறித்த மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றில்  தாக்கல் செய்துள்ளார்.

மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றை ஆரம்பிக்குமாறு கோரியுள்ள தக்ஷிலா ஜயவர்தன எனும் பெண், கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.