மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துபவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை, முதல் மாதக் கட்டணத்தை விடவும் அடுத்த மாதம் 10 சதவீதம் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, விசேட தள்ளுபடியை வழங்குவதற்கு மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை, இன்னும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்குச் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன என்று தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை, மின்சாரத்தைச் சேமிக்கும் வகையிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அச்சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகின்ற தனியார் நிறுவனம் உள்ளிட்ட பிரிவினருக்கு, ஊக்கத்தொகையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.