யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வைத்து இந்த கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது 

 வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் அரச மற்றும் தனியார் நிலங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனைமரங்கள் மற்றும் பயன்தரும் மரங்களையும் சட்டவிரோதமாக வெட்டி விற்பனை செய்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் அவர் அப்பிரதசத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களின் வையாளாக  இருந்து வந்தவர் என வெற்றிலை கேணி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.